வெளியானது உதயநிதியின் ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படம்
உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதனை ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் உதயநிதி நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். தமிழகம் முழுவதும் மொத்தம் 400 திரையரங்குகளில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து ஆடல் பாடல் என கொண்டாடி வருகின்றனர். இது இந்தியில் வெளியான 'ஆர்டிக்கள் 15' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :