கிராம நிர்வாக அலுவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 28-05-2022 02:52:22pm
கிராம நிர்வாக அலுவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

 திருவாரூர் நகரம் வடக்கு சேத்தி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சக்திவேல் (28) மனைவி தமிழ் லட்சுமி (20) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 திருமணமாகி ஏழு மாதங்களே ஆகியுள்ள நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 வரதட்சணையாக அதிக நகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கொடுமைப்படுத்தியதாக உயிரிழந்த தமிழ் லட்சுமியின் தந்தை திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ள திருவாரூர் தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo