தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 31-வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள மெகா தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாதவர்கள் இன்றைய மெகா முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags : Mega Vaccination Camp in one lakh locations in Tamil Nadu today