குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் -சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

by Editor / 29-07-2022 09:10:34am
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் -சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக திடீர் என கனமழை பெய்தது மேலும் வனப்பகுதியில் நீடித்த கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குற்றாலம் மெயின் அருவியில்  குளித்துக்கொண்டிருந்த 2பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகினர். தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்த காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று காலை வரை மூன்று நாட்கள் மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு தடை விதித்திருந்தது. இந்தநிலையில் இன்று காலை முதல் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது இதன் காரணமாக மூன்று நாட்களாக குற்றாலம் மெயின் அருவி பகுதி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் தற்பொழுது முதல் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

 

Tags :

Share via