இன்று உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிப்பு
கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நாட்பட்ட உணவுகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் உணவு பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று உலக உணவு பாதுகாப்பது தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் சில உணவால் பரவும் நோய்களைத் தடுத்து இறுதியில் அவற்றை ஒழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூட்டு முயற்சி ஆகும்.
இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் "பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பதாகும்". இதன் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் பாதுகாப்பான, ஊட்டச்சத்து உணவு முக்கிய வகிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
Tags :