மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உப கோயில் உண்டியல் 1,20 கோடிகாணிக்கை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர் ஆ.அருணாசலம் முன்னிலையில் இன்று இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள் திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள்,
மதுரை தெற்கு வடக்கு ஆய்வாளர்கள்,பக்தர் பேரவையினர் மற்றும் எஸ்.பி.ஐ.ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உண்டியல் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள்.
மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் மற்றும் முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி திருக்கோயில் உட்பட 10 உபகோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
அதில் தொகை ரூ. 1,20,97,991 (ரூபாய் ஒரு கோடியே இருபது லட்சத்து, தொன்னூற்று ஏழாயிரத்து தொன்னுற்று ஒன்று மட்டும்),பலமாற்று பொன் இனங்கள் 540கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் ஒரு கிலோ 280கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 323எண்ணம் வரப்பெற்றுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags :