போரூர் ராமச்சந்திரா  மருத்துவமனை சென்ற முதல்வர் 

by Editor / 03-07-2021 03:45:11pm
 போரூர் ராமச்சந்திரா  மருத்துவமனை சென்ற முதல்வர் 


 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் புறப்பட்டு சென்றார். அங்கே சில மணி நேரங்கள் இருந்த அவர், பின் தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் தனது மருத்துவ சிகிச்சைக்காக வருடத்துக்கு ஒருமுறை லண்டன் சென்று வருவார். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் இங்கிலாந்தை கடுமையாக பாதித்த நிலையில் அந்நாட்டுக்கு சென்று வரமுடியவில்லை. இந்த வருடமும் அவர் லண்டன் செல்ல திட்டமிட்டும், இன்னும் செல்லவில்லை. 
இந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதல்வர் சென்று வந்தது பற்றி அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில், “ (ஜூலை 3) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான அரையாண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ளும் மெடிக்கல் செக்கப் செய்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவுற்றதும் உடனடியாக அவர் மருத்துவமனையை விட்டுப் புறப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories