கல்லாக மாறும் 5 மாத பெண் குழந்தை
இரண்டு மில்லியன் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய இந்த நோயானது ஒருவரின் உடலில் உள்ள தோலை கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாற்றும் என்றும் இவர்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் எனவும் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.இதோடு இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் 20 வயதில் படுத்த படுக்கையாக ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த குழந்தைக்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்று கூறும் மருத்துவர்கள் இந்த குழந்தைக்கு எந்தவொரு ஊசியும், தடுப்பூசியும் செலுத்த முடியாது என்றும் இந்த குழந்தை வளர்ந்தபின் இவளால் குழந்தை பெற்றெடுக்கவும் முடியாது என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து லெக்ஸி ராபின்ஸ் பெற்றோர் கூறுகையில், அவள் மிகவும் புத்திசாலி. இரவு முழுவதும் நன்றாக தூங்குகிறாள், தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்கிறாள், அரிதாகவே அழுகிறாள்.
லெக்ஸிக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பெற்றோர்களாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். இதுபோன்ற கொடூரமான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என கூறியுள்ளனர்.மேலும், லெக்ஸியின் பெற்றோர் இந்த நோய் குறித்த ஆராய்ச்சிக்கும், தங்கள் மகளை காப்பாற்றுவதற்கும் நிதி திரட்ட தொடங்கியுள்ளனர்.
Tags :