புனே பாஜக எம்பி கிரிஷ் பாபட் காலமானார்

by Staff / 29-03-2023 02:19:14pm
புனே பாஜக எம்பி கிரிஷ் பாபட் காலமானார்

மகாராஷ்டிராவின் புனே பாஜக எம்பி கிரிஷ் பாபட் காலமானார். சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், ஆக்ஸிஜன் உதவியுடன் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் இன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via