வயது தடையில்லை..சேவைக்கு..மருத்துவராகும்  63 வயது மூதாட்டி. 

by Editor / 06-05-2023 08:58:24am
வயது தடையில்லை..சேவைக்கு..மருத்துவராகும்  63 வயது மூதாட்டி. 

தந்தையின்  கனவை நனவாக்க 63 வயது மூதாட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்த சுஜாதா ஜடா ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்று, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், இவர் சிறு வயதில் இருக்கும் பொழுது அவரது தந்தை மாதவிக ஜடா மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்று கூறியதை சுஜாதா ஜடா நினைத்து பார்த்துள்ளார் இதனை அடுத்து வயதை கூட பொருட்படுத்தாமல் ஓய்வு காலத்தை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுஜாதா ஜடா, இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து நீட் தேர்வு எழுதி கடந்தாண்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.மருத்துவ படிப்பை படித்து வருகிறார்.

 

Tags :

Share via

More stories