ஆன்லைன் மோசடிகள் கவனம் 

by Newsdesk / 26-07-2021 09:04:13pm
ஆன்லைன் மோசடிகள் கவனம் 

 

, போலி இ-மெயில்கள் அனுப்பி உங்களின் ஆன்லைன் வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை அறிந்து கொள்ள இது நிகழ்கிறது. சில சமயங்களில் நீங்கள் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்கும்பொழுது, சில லாட்டரி நிறுவனங்கள் உங்களுக்கு இ-மெயில்கள் மூலம் போலியான நோட்டீஸ் மற்றும் பரிசு பொருட்களை அனுப்புவார்கள். சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அப்பாவி மற்றும் ஏமாறக்கூடியவர்களை தந்திரமாக ஏமாற்றுகிறார்கள்.இது பெரும்பாலும் ஆன்லைன் டேட்டிங் வலைத்தளங்கள் மூலம் நடைபெறுகிறது, ஆனால் அவர்கள் சமூக ஊடகங்கள் அல்லது இ-மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி மூலமும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிமுகமானதாக தெரியவருகிறது. இம்மாதிரியான மோசடிகளை ‘கேட் ஃபிஷிங்’ என்றும் அழைப்பர். மோசடிகாரர்கள் பொதுவாக போலியான ஆன்லைன் சுயவிவரங்களை வடிவமைத்து உங்களை கவருகின்றனர். அவர்கள் ஒரு கற்பனையான பெயரைப் பயன்படுத்தலாம் அல்லது இராணுவ அலுவலர்கள், உதவித் தொழிலாளர்கள் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற உண்மையான, நம்பகமான மக்களின் அடையாளங்களை தவறாக பயன்படுத்தலாம். அவர்கள் உங்களிடம் அதிகமான உணர்ச்சிகளை குறுகிய காலத்தில் வெளிப்படுத்துவார்கள். உங்கள் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பெற, அவர்கள் அன்பான வார்த்தைகளை பொழிவது, 'தனிப்பட்ட தகவல்கள்களை' பகிர்ந்துகொள்வது, உங்களுக்கு பரிசுகளை அனுப்புவது போன்ற வழிகளில் பெருமளவு முயற்சி செய்வார்கள்.

உங்கள் நம்பிக்கையை வென்ற பிறகு, உங்களின் பாதுகாப்புகள் குறைந்த சமயத்தில் உங்களிடம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பணம், பரிசு அல்லது உங்கள் வங்கி / கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டு பெறுவார்கள். அவர்கள், உங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பெரும்பாலும் நெருக்கமானவற்றை அனுப்ப சொல்லி கேட்கலாம்.திரைப்படங்கள் அல்லது வீடியோ கேம்கள் சார்ந்த பதிவுகள் மற்றும் வினாடி வினாக்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். பொதுவாக, இக்கேள்விளுக்கான உங்களது பதில்களை வைத்து, உங்களை திரைப்பட கதாபாத்திரங்களோடு ஒப்பிடுவது அல்லது உங்களின் தனித்துவத்தை மதிப்பீடு செய்வர்.

பெரும்பாலும், இதுபோன்ற வினாக்களுக்கான உங்களின் பதில்களை வைத்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி மூன்றாம் நபர்களுக்கு விற்கின்றனர். பெரும்பான்மையான இவ் வினாடி வினாக்கள் ஃபேஸ் புக்கில் நுழைந்து பதிலளிக்குமாறு வலியுறுத்துகின்றன. இதன் மூலம் அவர்கள் உங்களின் இ-மெயில், இருப்பிடம், மொழி, வேலை மற்றும் பல தகவல்களை அவர்கள் எளிதில் பெற இயலும்.உங்கள் விருப்பத்திற்க மாறாக, ஒரு தனி நபர் அல்லது நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்புகள், அது தொலைபேசி, அஞ்சல், இ-மெயில் அல்லது சமுகவலை தளங்கள் மூலம் வரும்பொழுது, அது ஒரு மோசடியாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அது உண்மையாக இருக்கும் என நீங்கள் நம்பினால் ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம் என்று நினைவில் கொள்ளுங்கள்,
-ராகவா 

 

Tags :

Share via