பாம்பு கடித்து 17 வயது சிறுமி துடிதுடித்து பலி

by Editor / 12-04-2025 03:31:55pm
பாம்பு கடித்து 17 வயது சிறுமி துடிதுடித்து பலி

வேலூர் மாவட்டம்  ஒடுகத்தூர் அருகே விஷப் பாம்பு கடித்து 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகன் - செல்வி தம்பதியின் இளைய மகள் ஷாலினி துவைத்த துணியை காய வைக்கும் போது, அவரை விஷப்பாம்பு ஒன்று காலில் கடித்துள்ளது. இதையடுத்து, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ஷாலினியின் உயிர் பிரிந்துள்ளது.
 

 

Tags :

Share via