இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்திய ஹேக்கர்கள்

by Staff / 09-10-2023 03:03:48pm
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்திய ஹேக்கர்கள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஹேக்கர்கள் அந்த இணையபக்கத்தை ஹேக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த தகவல் பகிரப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஹேக்கிங் குழுக்கள் இஸ்ரேலின் தேசிய மின்சார ஆணையத்தின் இணையதளத்தையும் கணக்காளர் ஜெனரலின் இணையதளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய ஹேக்கர்கள் ஹமாஸின் இணையபக்கத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர்.

 

Tags :

Share via