நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலி.

by Editor / 29-04-2024 12:08:14am
நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலி.

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த  பில்டிங் காண்ட்ராக்டர் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சுமித்ரா ஆகியோர் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திருநெல்வேலி திரும்பிக் கொண்டிருக்கும்போது  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் நெடுங்குளம்  விலக்கு பகுதி அருகே சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை  இழந்து எதிர்பாராத விதமாக சாலையோர நீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காருக்குள் இருந்த இருவரும் பள்ளத்தில் இருந்த நீருக்குள் புகுந்ததால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 மேலும் தகவல் அறிந்து வந்த சங்கரன்கோவில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காரில்  கயிறை கட்டி காரை வெளியே எடுத்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சங்கரன்கோவில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலி.

Share via

More stories

Logo