தமிழகத்தில் சட்டங்கு ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது- பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா

திண்டுக்கல்லில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா பேட்டி:தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிற திமுக அரசு மக்கள் விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 6 சதவிகிதம் சொத்து வரி உயர்ந்து வருகிறது. கிராம பகுதிகளில் பால் உற்பத்தியாளர்களுக்கு விரோதமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது கடந்த 3 மாதங்களாக பாலுக்கான ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வருக்கு மக்களை பற்றிய அக்கறை இல்லை. குடும்பத்தை பற்றி தான் அக்கறை.நேற்றைய தினம் உளுந்தூர்பேட்டையில் ஒரு நாடகம் நடந்தது. அரசியல் மோசடியின் மொத்த அரசியல் அங்கு தான் நிகழ்ந்தது. திமுக அரசியல்வாதி கள் தான் அதிக மது ஆலைகளை வைத்துள்ளார்கள். இந்த மாநாட்டில் திமுக மது உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்இது மது ஒழிப்பு மாநாடா? மது ஆலை உரிமையாளர்கள் மாநாடா?அந்த மாநாட்டில் ஒரு பெண் காவல் ஆய்வாளரை தாக்கியுள்ளனர். சரக்கு மிடுக்கு பேச்சு தான் திருமாவளவன். ஆளுநர் சரியாக பேசியுள்ளார். காந்தி மண்டபத்தில் சரக்கு பாட்டிலா? கடந்த மூன்று ஆண்டுகளில் தலீத் மக்களுக்கு எதிராக 50 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல் அரசு மக்களால் தூக்கி ஏறியபட வேண்டி உள்ளது. விசிகவும் திமுகவும் சேர்ந்து நாடகமாடி வருகின்றனர்.பிஜேபிகிட்ட கூட்டணி நேர்மை இருக்கிறது.தமிழகத்தில் சட்டங்கு ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது.துணை முதல்வர் லேபிள் தான்.இதுனால மாற்றம் வரப்போவது கிடையாது என்றார்.
Tags : பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா