காவல்துறையினரை தக்க முயன்ற அரசு மருத்துவர்..? -வைரலாகும் வீடியோ .
சேலம் மாநகர காரிப்பட்டி காவல் நிலையம் கொலை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்று பெற வேண்டி வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு காரிப்பட்டி போலீசார் கொலை கைதிகளை அழைத்து சென்றுள்ளனர். அந்த கொலை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தகுதிச் சான்று தர முடியாது என்று வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் செந்தில்குமார் என்பவர் கூறியதால் போலீசார் மருத்துவ பரிசோதனை மற்றும் தகுதிச் சான்று ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் செந்தில் குமார் என்பவர் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாது தகுதி சான்றும் தர முடியாது என்று கூறியதல்லாமல் போலீசாரை ஆபாசமாக திட்டியும் கை ஓங்கி அடித்தும் ரகளையில் ஈடுபட்டு போலீசாரை கடுமையாக தாக்கியதாக கூறப்ப்டுகிறது.மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : காவல்துறையினரை தக்க முயன்ற அரசு மருத்துவர் -வைரலாகும் வீடியோ