கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடி நிலத்தை மீட்கக் கோரி வழக்கு.

by Editor / 07-12-2024 06:23:03pm
கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட  ரூ.5 ஆயிரம் கோடி நிலத்தை மீட்கக் கோரி வழக்கு.

கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட ரூ.5000 கோடி மதிப்பிலான நிலங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி, நிலங்களை மீட்க கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் சட்டவிரோதமாக விற்ற நிலங்களின் தற்போதைய மதிப்பு 5,000 கோடி என மனுதாரர் தெரிவித்த நிலையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

 

Tags : ரூ.5 ஆயிரம் கோடி நிலத்தை மீட்கக் கோரி வழக்கு:

Share via