சிறுநீரக விற்பனை :சிறப்பு புலனாய் குழு இடைத்தரகர்களை கைதுசெய்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விசைத்தறி தொழில் நலிவடைந்ததால் மகளிர் சுய உதவி குழுக்களில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களை குறி வைத்து அவர்களிடம் போலி முகவரிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் சிறுநீரக விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக அரசு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் தனி மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர் .விசாரணையின் முடிவில் சிறுநீரக விற்பனையில் மோசடி நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்ற தானாக முன்வந்து வழக்கினை விசாரித்தனர். இதன் அடிப்படையில் மதுரை மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த இரண்டு கண்காணிப்பாளர்கள் சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் நேற்று சிறப்பு புலனாய்வு குழு போலீசார் பள்ளிபாளையம் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் பேரில் சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்ட பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்த இடைத்தரகர்கள் ஆனந்தன்,ஸ்டாலின் மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதற்கு முன்பாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது இருவரும் சிறப்பு புலனாய்வு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.கிட்னி விற்பனை விவகாரத்தில் புரோக்கர்களாக செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாமக்கல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : சிறுநீரக விற்பனை :சிறப்பு புலனாய் குழு இடைத்தரகர்களை கைதுசெய்தது.