நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்அனுப்பி உள்ளது.
நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்அனுப்பி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கவசம் தொடர்பான பண மோசடி வழக்கில் அவர் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்.விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலை சன்னதி கதவுகள் மற்றும் துவாகர பாலகர் சிலைகளுக்கு தங்க கவசம் பொருத்தும் பணியின் போது சுமார் 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவருடன் ஜெயராமுக்கு இருந்த நிதி தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. திருடப்பட்டதாக கூறப்படும் தங்க கவசங்களை ஜெயராமின் சென்னை இல்லத்திற்கு எடுத்துச் சென்று அங்கு உன்னிகிருஷ்ணன் போத்தி பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் ஏற்கனவே கேரளா காவல்துறையின் சிறப்பு பலனாய்வு குழு விசாரணை நடத்தியுள்ளது முன்னதாக நடந்த விசாரணையில் குடும்ப நன்மைக்காகவே ஆன்மீக ரீதியில் அந்த பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் இதில் நடந்த முறைகேடுகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று ஜெயராமன் தெரிவித்திருந்தார். தற்போது இந்த வழக்கில் பணம் மோசடி கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. உன்னிகிருஷ்ணன் மூலமாக ஏதேனும் சட்ட விரோத பல பரிமாற்ற நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறியவே அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஒரு சாட்சியாக மட்டுமே கருதப்படுவார்.
Tags :


















