மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள்இடம் மாற்ற நடவடிக்கை-இந்திய தேர்தல் ஆணையம்
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளீட்டு ஐந்து மாநிலங்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரே மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள் தங்களது சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றி வரும் அதிகாரிகள் தமிழ்நாடு ,புதுச்சேரி, கேரளா ,மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வருகிறவர்களை இடம் மாற்ற நடவடிக்கைகளை முடித்து அது குறித்து அறிக்கையை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயல்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகளுடன் நேரடியாக தொடர்பு இல்லாத ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது மேலும் மே 31 2021,000-க்குள் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கும் இதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :


















