நிபா பாதிப்பால் 2 பேர் மரணம்.. தமிழக எல்லையில் கட்டுப்பாடு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதித்த இரண்டாவது நபர் இன்று உயிரிழந்ததையடுத்து, அவர் தங்கியிருந்த வீட்டை சுற்றி 3 கிமீ தூரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. வௌவால்கள் கடித்த பழங்கள் மூலம் வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில், அத்தகைய பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags :