தஞ்சையில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீஸ்

by Editor / 10-10-2021 10:43:55am
தஞ்சையில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீஸ்

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்த தம்பதி குணசேகரன்(24) - ராஜலட்சுமி(20). ராஜலட்சுமிக்கு கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை பிறந்தது. தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இவருக்கு குழந்தை பிறந்த நிலையில் பக்கத்து வார்டில் இருந்த பெண் ஒருவர் அவ்வப்போது ராஜலட்சுமியை வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார்.

ராஜலட்சுமி தனியாக இருக்கும் நேரங்களில் வந்து அவருக்கு உறுதுணையாக இருப்பது போல நாடகம் ஆடியுள்ளார். ராஜலட்சுமியும் 20 வயதே ஆவதால் குழந்தை வளர்ப்பு குறித்தும், ஆரம்ப நாட்களில் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்ற விவரங்களையும் அந்த பெண்ணிடம் கேட்டு இருக்கிறார்.. இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை மாலை ராஜலட்சுமி கழிவறைக்கு சென்ற போது நேரம் பார்த்து அந்த மர்ம பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.

கட்டை பை ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு அங்கிருந்து அந்த பெண் தப்பித்து சென்றார்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண் ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றுள்ளார். ஆட்டோவின் நம்பரை வைத்து, உடனடியாக ஆட்டோ டிரைவரை பிடித்த போலீசார், அந்த பெண்ணை எங்கே இறக்கிவிட்டீர்கள் என்று விசாரித்தனர். இந்த நிலையில்தான் பட்டுக்கோட்டை சென்ற தனிப்படை போலீஸார் அங்கே தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அங்கு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அண்ணா நகரைச் சேர்ந்த விஜி(37) என்ற பெண்ணை கைது செய்தனர். 

 

Tags :

Share via

More stories