கட்டுமான பணியில் விபத்து அசாமைச் சேர்ந்த 9 பணியாளர்கள்பலி.

சென்னை எண்ணூரில் பெல் நிறுவனத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், "எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டுவரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் அசாமைச் சேர்ந்த 9 பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Tags : கட்டுமான பணியில் விபத்து அசாமைச் சேர்ந்த 9 பணியாளர்கள்பலி.