நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்பவை

by Admin / 15-01-2022 12:49:14pm
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்பவை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்பவை

ஆரோக்கியம் தான் நம்மை ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.உடல்நலமுடனும் நோய்யற்றும் இருப்பதற்கு தேவையானவை நாம் உட்கொள்ளும் உணவிலிருந்தே கிடைக்கிறது.அத்தகைய உணவு எவை என்பதை அறியவேண்டியது அவசியம்.

பெரும்பாலும் நாம் நினைப்போம்.மாமிச உணவில்தான் அதிக சக்தி இருக்கிறது,காய்கறிகளில் அந்தளவு சத்து இல்லை என்று.சரிதான் .மாமிசத்தில் காய்கறி,தானியங்களை விட அதிக புரத சத்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால்,காய்கறி,தானியஙகளில் குறைந்தளவு இருந்தாலும் எல்லாச்சத்துகளும் நிரம்பியிருக்கின்றன.
அமினோஅமிலங்கள் உடல்திசுக்களிள் வளர்ச்சிக்கும் நோய் எதிப்பு சக்தியை பெருக்குவதற்கும் காரணமாக இருக்கின்றன.இச்சக்தி புரத சத்திலிருந்தே கிடைக்கிறது .புரதம் முட்டை,கோழிக்கறி,ஆட்டுக்கறிபோன்ற
உயிர்வாழ்வினங்களிலிருந்து   பெறப்படும் தசைகளை உண்பது வழி பெறப்படுகிறது.ஒரு மனிதருக்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட நூறு கிராம் தேவைபடுகிறது.(உடல் எடை பொருத்து வேறுபடும்)இது மாமிசத்திலிருந்து முழுமையாக கிடைக்கிறது.புரதம் முழுமையாக கிடைக்கப்பெறாதோருக்கு  ஹார்மோன்கள் சீராக இயங்காது.பசி எடுக்காது.முடிஉதிர்தல் உடல் சதைபிடிப்பு அதிகம் வராது.தசைகள் வலுவற்றிருக்கும்.ஆனாலும்,தினமும் மாமிசம் சாப்பிடுவது சாத்தியமில்லை.
அதனால்,காய்கறி,தானியம்,கீரை இவற்றில் புரதம் எதில் உள்ளது என்று கண்டறிந்து உண்பதன் மூலம் புரதத்தை நம்உடல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.சைவ உணவில் பயிர் வகைகளான பருப்புகளில் புரதம் அதிகம் கிடைக்கிறது.உளுந்து,பச்சை பயிறு, கொண்டகடலை,வேர்க்கடலை,கொள்ளு(கானம்) தட்டை பயிறு,பச்சை பட்டாணி,துவரை,சோயா,அவரை,
பாதாம்,முந்திரி,ஆளிவிதை,பூசணி,சூரியகாந்தி விதைகளிலும்உள்ளது.கீரைகளில்முருங்கை,அகத்தி,வல்லாரை, சிறுகீரை,பொன்னாங்கண்ணி கீரைகளிலும் கேழ்வரகு,நாட்டுசோளம் ,காளான்,புரோக்கோலியிலும் தயிர்,பாலாடை கட்டி,பனீர்போன்றவற்றில் அதிகமுள்ளது.உடறபயிற்ச்சி மேற்கொள்பவர்கள் மேற்கண்டவைகளுடன் வே புரோட்டீன் என்ற படவுடைரை தண்ணீரில் கலக்கி குடித்து புரத சத்தை பெறுவர். நாம் தினமும் உண்ணும் உணவை சரியாக முறைப்படுத்தி உண்டாலே நம்உடல் தனக்கு தேவையான சக்தியை பெறும்.

 

Tags :

Share via