நாட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்தனர்

by Admin / 28-02-2022 04:50:12pm
நாட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வந்தனர்

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி உள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் ராணுவத்துக்கு உதவியாக ஏராளமான பொதுமக்கள் ரஷிய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நவீனரக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், கையெறிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் சுற்றி வருகின்றனர். வக்கீல்கள், டாக்டர்கள், ஐ.டி. ஊழியர் என அனைத்து தரப்பு மக்களும் கீவ் நகர தெருக்களில் ஆயுதங்கள் ஏந்தி இருப்பதை காண முடிந்தது.

இதற்கிடையே நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் பொதுமக்களில் ஆயிரகணக்கானோர் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது சொந்த மண்ணை காப்பாற்றுவதற்காக கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளுடன் சண்டை போட்டு வருகிறார்கள்.


 

 

Tags :

Share via

More stories