மருத்துவ படிப்பு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு தள்ளுபடி
2021-22 கல்வி ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் 1,456 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு எழுதிய மருத்துவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருதா போஸ் ஆகியோர் கொண்ட விடுமுறை அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களுக்கான வகுப்புகள் கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது. தற்போது சிறப்பு கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்த்தால் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வை பாதிக்கும் என்று வாதாடினார். இதையடுத்து இந்த விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது. இன்று இதை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags :