உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3வது பெரிய நாடாக இந்தியா உயர்ந்தது.

by Editor / 06-08-2022 11:50:12pm
உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3வது பெரிய நாடாக இந்தியா உயர்ந்தது.

நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 2020-21 காலகட்டத்தில் (122.11 பில்லியன்) 12 ஆயிரத்து 211 கோடியாக அதிகரித்துள்ளது. 1950-51 காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி (1.83 பில்லியன்) 183 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் முட்டை உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் சீனாவும் (38 %), இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் (7 %) உள்ளன. மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
 

 

Tags : India has become the 3rd largest egg producer in the world.

Share via