லோன் ஆப்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை
இந்தியாவில் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர். சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான செயலிகளை தடை செய்துள்ளது. ஆனாலும், மோசடி செயலிகளால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத லோன் செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.
Tags :