மகளிர் சுயஉதவிக்குழு கடந்தருவதாக கோடி சுருட்டிய மோசடி கும்பலுக்கு வலைவீச்சு.. 

by Editor / 18-03-2023 10:12:56am
மகளிர் சுயஉதவிக்குழு கடந்தருவதாக கோடி சுருட்டிய மோசடி கும்பலுக்கு வலைவீச்சு.. 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்தொகுதிகுட்பட்ட  வேர்க்கிளம்பி சந்திப்பில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் தனிநபர் மற்றும் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் வழங்கப் போவதாக ஆசை வார்த்தை கூறினர். இதற்காக பொதுமக்களிடம் ஆதார், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் பெற்ற அவர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ரொக்கம் மற்றும் வரைவு காசோலையையும் வாங்கி கொண்டனர். இவ்வாறு மொத்தம் ரூ. 3 கோடியை அந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பெற்று மோசடி செய்தது. மேலும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர். இதுதொடர்பாக அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றிய விளவங்கோடு கோணத்துவிளைவீடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி நிதி நிறுவனத்தை நடத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த சியாம் ஜோஸ்வா, துர்கா தேவி, சிவகங்கையை சேர்ந்த வேணுகோபால், திருநெல்வேலியைச் சேர்ந்த அபுதாப், கும்பகோணத்தைச் சேர்ந்த சந்தோஷ், நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜமால் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இவர்கள் 6 பேரின் முழுமையான முகவரி மற்றும் அடையாள விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. எனவே போலீசார் அவர்களுடைய புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பலரும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து வருகிறார்கள். இதனால் இந்த வழக்கில் புகார்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via