மேஷம் ராசி

by Admin / 01-01-2026 04:50:23pm
மேஷம் ராசி


உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் மூலம் லாபமும் அனுகூலமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோக பணிகளில் உழைப்புக்கேற்ப உயர்வுகள் உண்டாகும்.

 

Tags :

Share via