நிலத்தகராறில் அரிவாள் மற்றும் மண் வெட்டியுடன் ஆபாசமாக பேசி தாக்கிய பெண்ணின் வீடியோ எடுத்த கணவன் மனைவி கைது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புதுக்குடியில் உள்ள விவசாய நிலம் தொடர்பான பிரச்சனையில் அரிவாள் மற்றும் மண் வெட்டியுடன் எதிர் தரப்பினரை தாக்கும் பெண் மற்றும் அவரது கணவர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கௌதமி மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகியோர் குடவாசல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர் தரப்பினரான ஜெகன் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குடவாசல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tags :