துலாம் ராசி

by Admin / 01-12-2024 05:10:48pm
துலாம் ராசி

இந்த வாரம் குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழ்நிலை அமையும். புதிய பொறுப்புகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

வழிபாடு : குலதெய்வத்தை வழிபட மனதில் நினைத்த எண்ணம் ஈடேறும். 
 

 

Tags :

Share via