கன்னி ராசி
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் பணிகளை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல்கள் அமையலாம். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்த தாமதங்கள் விலகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சு வன்மையால் அனுகூலம் உண்டாகும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் காணப்படும். வெளியூர் வியாபார வாய்ப்புகள் சாதகமாகும். குடும்பத்திலிருந்து கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பெண்கள் ஒரு முறைக்கு இருமுறை தீர ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பது நல்லது. மாணவர்கள் உடன் இருப்பவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
Tags :


















