ஒரே புடவையில் துாக்கிட்டு காதல் ஜோடி தற்கொலை

by Staff / 25-11-2022 02:46:15pm
ஒரே புடவையில் துாக்கிட்டு காதல் ஜோடி தற்கொலை

தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். உத்திரமேரூரில் தனியார் கல்லுாரியில் படித்த போது, அதே கல்லுாரியில் பி. டெக். , படித்த, அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி, 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இருவரும், 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், யுவராணிக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.இதனால், மனவருத்தம் அடைந்த யுவராணி, நேற்று முன்தினம், பீர்க்கன்காரணையில் உள்ள காதலன் வீட்டிற்கு வந்தார்.

ஜெயராமனின், தாய் மற்றும் சகோதரர் வேலைக்கு சென்று விட்டனர். இருவரும், 'ஆன்லைன்' வாயிலாக மதிய உணவு 'ஆர்டர்' செய்து சாப்பிட்டனர்.இந்நிலையில், மாலை வேலை முடிந்து வீட்டிற்கு ஜெயராமனின் தாய் பவுனம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இருவரும் ஒரே புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் விரைந்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதற்கட்ட விசாரணையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், யுவராணி வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories