ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு

by Staff / 16-12-2022 11:55:50am
ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு

ஆவின் நிறுவன பால் பொருட்களின் விலையானது அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவினில், 5 லிட்டர் நெய் பாட்டில், ரூ.2,900 விலையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது, ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
200 மி.லி. ரூ.130-ல் இருந்து ரூ145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via