இன்ஸ்டாகிராமில் இளம்பெண் படத்தை எடுத்து  ஆபாசமாக மார்பிங்  செய்த நபர் கைது..

by Editor / 24-01-2023 09:37:27pm
இன்ஸ்டாகிராமில் இளம்பெண் படத்தை எடுத்து  ஆபாசமாக மார்பிங்  செய்த நபர் கைது..

திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டியை சேர்ந்தவர் 22 வயதுடைய  அழகு கலை நிபுணரான இளம் பெண் ஒருவரின் கைபேசி எண்ணிற்கு கடந்த 21.06.2022-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் whatsapp மூலமாக தொடர்பு கொண்டு ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பியதாகவும், மேலும் அந்த மர்ம நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகவும், இது குறித்து அந்த இளம்பெண் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம்  புகார் மனு அளித்தார். இளம்பெண்ணின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடவே மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பார் ராஜி மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் ராஜ் உதவிஆய்வாளர் ராஜதுரை தலைமையில்  சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் நான்கு சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் விசாரணையில் எதிரி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் இன்ஸ்டாகிராமில் வீல்ஸ் பதிவிடும் இளம்பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங்  செய்து அவர்களுக்கு அனுப்பி அவர்களை தனது பாலியல் ஆசைக்கு இணங்கும்படியும் ஆபாச வீடியோ அனுப்பி  செய்யும்படியும் தொடர்ச்சியாக ஆபாசதொல்லைக் கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் பல இளம் பெண்கள் எதிரியால் மிரட்டப்பட்டனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் எதிரி  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளத்தில் பிரவேசி செட்டிங்ஸ் எனாப்பில்  செய்து வைக்குமாறும், முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைத்தளங்களில்  அனுப்பும் மெசேஜ்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் இது தொடர்பாக ஆபாச மிரட்டல்கள் எதுவும் இருக்கும் பட்சத்தில் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via