எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய சிஇஓ

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரியை அதிரடியாக நீக்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் தான் தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டார். அதன்படி, அவர் புதிய தலைமை செயல் அதிகாரியை (சி.இ.ஓ) அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால், அது ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கி ட்விட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.இது குறித்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அதில், சி.இ.ஓ. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் சி.இ.ஓ. என்று எழுதியிருந்தது.
அதற்கு முன்னாள் மேஜையில் சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதன் மேல், கையெழுத்திற்கு பதிலாக பிளாக்கியின் கால் தடங்களும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளன. ஏதேனும் அவசர இ-மெயில் அனுப்ப வேண்டும் என பிளாக்கி விரும்பினால் அதற்கு உதவுவதற்கு ஏற்ற வகையில், ட்விட்டர் லோகோவுடன் கூடிய சிறிய லேப்டாப் ஒன்றும் பிளாக்கியின் முன்னால் உள்ளது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு, ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வை பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு ட்விட்டர் பயனர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.
Tags :