கஞ்சா விற்ற 5 பேர் கைது.

by Staff / 18-02-2023 12:46:45pm
கஞ்சா விற்ற 5 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சுசீந்திரம் அருகே உள்ள 18-படி இசக்கி அம்மன் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புத்தளம் அருகே உள்ள நைனாபுதூரை சேர்ந்த ரெஞ்சித் குமார் (வயது 25), வடக்கு தேரிவிளையை சேர்ந்த விஜய் (21), சொத்தவிளையை சேர்ந்த ராஜேஷ்(23), சிங்களேயர்புரியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (21), புத்தளம் மெயின் ரோட்டை சேர்ந்த அனீஷ் (22) என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via