ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

by Editor / 31-01-2023 08:00:18pm
ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலையபகுதியில் நடந்த கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலையபகுதியில் அடிதடி கொலைமுயற்சி,கொள்ளை உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய சுபாஷ்கண்ணன் (24), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லையில் பாலியல் வழக்கின் குற்றவாளியான ரகு (37) மற்றும் ஆலங்குளம் காவல் நிலையபகுதியில்  கஞ்சா விற்பனை செய்த  வழக்கின் குற்றவாளியான ராசு @ செல்வராஜ்(34) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சாம்சன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்  உத்தரவின் பேரில்  மேற்படி ஐந்து நபர்களும்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில்  சமர்பிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories