200 கோடி மோசடி; அதிபரின் மனைவி, டாக்டர் மகள் கைது

சென்னை செம்பியம் பாரதி சாலையில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. 48 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம் வருடத்திற்கு 12 சதவீதம் வட்டி தருவதாக கூறியதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டி தொகையை திருப்பி தராமல் இந்நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் நிறுவனத்திடம் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டோர் கடந்த சில நாட்களாக இந்நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தி வந்தனர்.
Tags :