2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை
இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இது குறித்து வெளியான அறிக்கையில், Clean Note Policy என்ற கொள்கையின் படி, மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் எந்த ஆவணமும் தேவையில்லை என வங்கி கிளைகளுக்கு எஸ்.பி.ஐ வங்கி உத்தரவிட்டுள்ளது.
Tags :