மெரினா சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

by Staff / 05-07-2023 04:57:42pm
மெரினா சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை நாளை முதல் சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி இல்லை என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை மெரினா அருகே கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லைட் ஹவுஸ் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via