களைகட்டும் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்ட கர்நாடக புதிய விமானநிலையம்.

கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்குகிறது. இண்டிகோ விமானம் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்பட்டு 11.5 மணிக்கு சிவமொக்கா சென்றடையும் என்று கனரக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தால் சிவமொக்கா, சிக்மாங்குளூர், தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இந்த விமான நிலைய கட்டிடம் தாமரை வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : At Shivamogga Airport, Karnataka