தலைக்கேறிய மது போதை காரணமாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

by Admin / 26-09-2023 01:45:51pm
தலைக்கேறிய மது போதை காரணமாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் சேர்மராஜ் (32) தனியார் ஆன்லைன் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நேற்று இரவு மது போதையில்  வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி இரு வீடுகளுக்கிடையே உள்ள சந்தில் விழுந்துள்ளார்.

அதிகாலையில் அக்கம் பக்கத்தினர்  சேர்மராஜ் சந்தில் விழுந்து கிடந்ததை பார்த்தபோது உடம்பில் காயங்கள் ஏற்பட்டு சுய நினைவின்றி கிடந்துள்ளார் உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு திருமணமாகி ஒன்றறை வருடமாகி குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகிய நிலையில் இவரது இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

தலைக்கேறிய மது போதை காரணமாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
 

Tags :

Share via

More stories

Logo