நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் சீமான்

by Staff / 26-09-2023 05:42:39pm
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் சீமான்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் "அதிமுக- பாஜக கூட்டணி முறிவை நிரந்தர தீர்வாக பார்க்கிறேன். தமிழனாக பிறந்த எல்லோரும் தமிழர்கள் இல்லை. தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக போராடுபவர்கள் தமிழர்கள்" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இதனை அடுத்து தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற கோட்பாட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via