வங்கி மேலாளரிடம் சைபர் கிரைம் மோசடி

புழல் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன், அண்ணாநகரில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவரை தொடர்புகொண்ட கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை கேட்டுள்ளனர். மோசடியாளர்கள் என அறியாத கிருபாகரன் OTP எண்ணைக் கூறி ரூ.1.30 லட்சத்தை இழந்துள்ளார். வங்கி மேலாளரே சைபர் மோசடியில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :