கிணற்றில் குதித்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

by Staff / 01-11-2023 12:51:10pm
கிணற்றில் குதித்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

ஓமலூர், தீவட்டிப்பட்டி வேடப்பன்காடு பகுதியை சேர்ந்த ராஜி விவசாயி. இவரது கிணற்றில்  பெண் ஒருவர் செல்போனில்பேசியபடியே   திடீரென  குதித்தார். இதுகுறித்து  காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம் நூலள்ளி, என். எஸ். ரெட்டியூரை சேர்ந்த தென்னரசு மனைவி சித்ரா (வயது 26) என்றும். நிறைமாத கர்ப்பிணியாக உள்ளாா் என் றும் தெரிய வந்தது.. குடும்ப பிரச்சினை காரணமாக  தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo