இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 16-11-2023 05:24:41pm
இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்றுவிட்டதால் தென் தமிழக மாவட்டங்களிலே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories