நடிகை குஷ்பு மீது காவல் ஆணையரிடம் புகார்

by Staff / 24-11-2023 01:56:53pm
நடிகை குஷ்பு மீது காவல் ஆணையரிடம் புகார்

திமுக பிரமுகர் ஒருவருக்கு, 'உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது' என பிஜேபி நிர்வாகியும் தேசிய மகளிப் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிலளித்திருந்தார்.இவரின் இக்கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பு எனவும் குஷ்பு விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் விசிக பிரமுகர் கார்த்தி என்பவர் ன்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியதால், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories