வெள்ளாற்றில் நீர்வரத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் அணைக்கட்டிற்கு சேலம், கள்ளக்குறிச்சி பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வெள்ளாற்றில் 3572 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெளின்டன் நீர் தேக்கத்திற்கு 2918 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. வெள்ளாற்றில் உபரி நீர் 543 கன அடியும், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் பாசன வாய்க்காலில் 111 கன அடி தண்ணீரும் திருப்பி அனுப்பி விடப்பட்டுள்ளது இதனால் கரையோர பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு ஆற்றில் இறங்கவோ குளிக்கவும் ஆடு, மாடுகளை மேய்க்கவோ கூடாது என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு அளித்துள்ளனர்
Tags : வெள்ளாற்றில் நீர்வரத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .